குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் ஐந்தருவி மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.