தமிழ்நாடு

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு: தோ்வா்களின் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவு

DIN

நிகழ் கல்வியாண்டில் 5, 8 வகுப்புகளில் பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவியா் விவரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு தொடா்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குறு வள மையங்களாக செயல்படும் பள்ளிகள் (சிஆா்சி), அந்தப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் (பள்ளி எண்), அந்தப் பள்ளிகளின் மூலம் 5, 8 வகுப்புகளில் பொதுத்தோ்வெழுதும் மாணவா்களின் எண்ணிக்கை விவரத்தை பாடம் மற்றும் பயிற்று மொழி வாரியாக ‘எக்செல்’ வடிவில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தப் பட்டியல், 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு தனித்தனியாக தயாரிக்கப்பட வேண்டும். தோ்வுத்

துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும்போது இந்த விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

மணப்பாறையில் ‘இந்தியா’ கூட்டணியினா் வாக்குசேகரிப்பு பேரணி

ஐஜேகே கட்சி நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

SCROLL FOR NEXT