தமிழ்நாடு

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகிக்க கூடுதல் ரயில்

DIN


ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக்கு குடிநீர் விநியோகிக்க கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த மாதம் 21-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, ஜோலார்பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை காலை முதல் ஜோலார்பேட்டையில் ரயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரயில் 25  லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம்  ரயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு ரயில் மூலம் 25 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 4-ஆவது  நாளான திங்கள்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலைய 5-ஆவது யார்டுக்கு சிறப்பு ரயில் வந்தடைந்தது. 5-ஆவது யார்டில் ரயிலுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரத்தை ஊழியர்கள் துண்டித்தனர். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட ரயில்வே  ஊழியர்கள் ரயிலில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3.30 மணி நேரம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன் பிறகு ரயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த ரயில் திங்கள்கிழமை இரவு சென்னை நோக்கிப் புறப்பட்டது.
தலைநகர மக்களுக்கு திங்கள்கிழமை வரை தலா 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரயில் 50 வேகன்களுடன் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை ஜோலார்பேட்டை வந்தடைகிறது. அதன் பின், அதையும் சேர்த்து 2 ரயில்கள் மூலம் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
அதன் பின் ரயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT