தமிழ்நாடு

ரூ.633 கோடியில் 5 இடங்களில் வெள்ள உபரி நீரை பாசனத்துக்கு திருப்பத் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

DIN


வெள்ள உபரி நீரைத் திருப்பும் பணிகள்  ரூ.633 கோடியில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தருமபுரி கேசர்குலி அல்லா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் வெளியேறும் உபரி நீரை அணையின் இடதுபுறக் கால்வாயின் நெடுகையில் 5.275 கி.மீட்டரில் புதிய பிரிவுக் கால்வாய் அமைத்து கோட்டூர் ஜெர்தலாவ் ஏரி, திருமல்வாடி ஏரி மற்றும் தாசன் ஏரி ஆகிய 3 ஏரிகளுக்கு வழங்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். 
சேலம் கைகாண் வளவு காட்டாற்றிலிருந்து உபரி நீரை,  கரியகோயில் நீர்த்தேக்கத்துக்குத் திருப்பும் பணி ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் பணி ரூ.565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு வரட்டுப்பள்ளம் அணைக்கு மணியாச்சிப் பள்ளத்தின் வெள்ளநீரைக் கொண்டு செல்லும் திட்டத்துக்கு தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், திண்டுக்கல் வரதமாநதி அணை வெள்ள நீரை  சத்திரப்பட்டி கருங்குளத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணி ரூ.60 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் புதிதாக நீர்த்தேக்கம், ஏரி மற்றும் கசிவு நீர்க் குட்டை அமைக்கும் பணிகள் ரூ.137.42 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம் திருவாலி ஏரியின் உபரிநீர் வழிந்தோடியான நாட்டுக்கண்ணி மண்ணியாற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டிலும், கரூர் நஞ்சை புகலூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி ரூ.495 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் ரூ.105.90 கோடி மதிப்பீட்டிலும், 2 மாவட்டங்களில் 2 அணைக்கட்டுகள் ரூ.8.94 கோடி மதிப்பீட்டிலும், 2 மாவட்டங்களில் 2 படுகை அணைகள் ரூ.13.50 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டில் குளவாய் ஏரியினை மீட்டெடுத்து, சென்னையின் நீட்டிக்கப்பட்ட புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரம் மேம்படுத்தும் திட்டம் ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றார்.
அமைச்சர் குடியிருப்புகளில் ரூ.3 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்
 சென்னை அடையாறு பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பு மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு வளாகங்களில் சுகாதார வசதி, உட்புறச் சாலை மற்றும் தெருவிளக்கு அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT