தமிழ்நாடு

வேலூரில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

DIN


வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுகவின் சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தேனாம்பேட்டை அன்பகத்தில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியது: மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
37 தொகுதிகளிலும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டோம் என்று கூறி வருகின்றனர். வேலூர் தொகுதி தேர்தலிலும் இதைக் கூறுவர். அதனால், வேலூர் தேர்தலில் எப்படியும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதுதான் உண்மையான வெற்றியாக அமையும். 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலில் வர உள்ளது. அதிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு பகுதி வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றுமாறும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சாய் தன்ஷிகா

அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது: கமல்ஹாசன்

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள்: அண்ணாமலை

SCROLL FOR NEXT