தமிழ்நாடு

தண்டவாள இணைப்பில் சிமென்ட் கல்: போலீஸார் விசாரணை

DIN


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரயில் தண்டவாள இணைப்பில் சிமென்ட் கல்லை மர்ம நபர்கள் வைத்து சென்றுள்ளனர். இதனால், ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை  இரவு மன்னார்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயில் வந்தது. பின்னர், வழக்கம்போல் ரயில் என்ஜினை திசை மாற்றும் பணிக்காக என்ஜின் கழற்றப்பட்டு, மறுபக்கத்துக்கு கிழக்கு நோக்கி சென்றபோது, சிறிது தூரத்தில் சிக்னல் கிடைக்காமல் என்ஜின் நின்றது. அப்போது, தண்டவாள இணைப்பில் சிமென்ட் கல் ஒன்று இருப்பதை ரயில் ஓட்டுநர் கவனித்தார். அந்த கல்லை எடுத்துக்கொண்டு, ரயில் என்ஜினை திசைமாற்றி ரயில் பெட்டிகளோடு இணைத்து, திருச்சிக்கு ரயிலை இயக்கிச் சென்றார்.
பின்னர், திருச்சி கோட்ட அலுவலகத்தில் சிமென்ட் கல்லை ஒப்படைத்து, அந்த கல் தண்டவாளத்தில் இருந்தது குறித்து புகார் செய்தார். அதன்பேரில், ரயில்வே போலீஸார் மற்றும் நீடாமங்கலம்  போலீஸார் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்த தண்டவாளப் பகுதியைப் பார்வையிட்டு, வேறு ஏதேனும் நாசவேலை செய்யப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் சிக்னல் பாயிண்டில் ரயில் தண்டவாளத்தில் ஜல்லிக் கற்களை வைக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றுவந்தது.
ரயில்வே போலீஸார், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கையின் காரணமாக இந்த சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ரயில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டிருப்பது, ரயிலை கவிழ்க்க சமூக விரோதிகள் சதி செய்துள்ளனரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செயல்படாத கேமரா: சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்த தண்டவாளப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது சேதமடைந்து, செயல்படாமல் உள்ளது. இதை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT