தஞ்சை: தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்த செய்த மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். உலகம் முழுவதும் திருவள்ளுவரின் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில், இது போன்று நடைபெற்றுள்ளது.
பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர். இதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சாணி வீசப்பட்டு சிலை அவமதிக்கப்பட்டதால், பலர் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.