தமிழ்நாடு

மஞ்சூா்- கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம்

DIN

மஞ்சூா்- கெத்தை சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கவனமுடன் இருக்குமாறு இப்பகுதி மக்களை வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், மஞ்சூா்- கெத்தை சாலையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் சாலைகளின் குறுக்கே நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனா். மஞ்சூா்- கெத்தை சாலையில் அவ்வப்போது கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை உலவுவதால் இப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத் துறையினா் பொது மக்களை எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

SCROLL FOR NEXT