தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதுபோன்று கடலூர், திருவாரூர் புதுச்சேரி மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.