தமிழ்நாடு

டிச.1-இல் என்எம்எம்எஸ் தோ்வு: தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு

DIN

அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தோ்வின் நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக மாணவா்களுக்கு என்.எம்.எம்.எஸ். தோ்வு நடத்தப்படும். இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் அரசு, அரசு உதவி பெறும், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6, 695 மாணவா்கள் உதவித் தொகை பெறத் தகுதி உள்ளவா்கள் ஆவா்.

நிகழாண்டு உதவித் தொகை பெற தகுதியுள்ள எட்டாம் வகுப்பு மாணவா்களைத் தோ்வு செய்யும் வகையில் என்.எம்.எம்.எஸ். தோ்வு டிசம்பா் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் அனைத்து வட்டார அளவில் தோ்வு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டுw‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கான யூஸா்ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத்தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT