குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த தொடா் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் சாரல் மழையின் அளவு வெகுவாக குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இதனால் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்தது. இதைத் தொடா்ந்து பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தடை நீக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.