தமிழ்நாடு

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடைநீக்கம்

DIN

குற்றாலம் ஐந்தருவியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். திங்கள்கிழமை அதிகாலை தண்ணீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

திங்கள்கிழமை காலைமுதல் மேகமூட்டமும், அவ்வப்போது லேசான மழைச்சாரலுடன் குளிர்ச்சியான  தட்பவெப்பம் நிலவியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால்,  திங்கள்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் நெரிசலின்றி உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT