ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் திருடுப்போனதால், சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் தட்சனாமூர்த்தி(22). இவர் அருகில் உள்ள தகரப்பட்டி கிராமத்தில் உள்ள பூபதி என்பவரின் பால் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார், தட்சனாமூர்த்தி வழக்கமாக அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாவியை மறந்து வண்டியிலே விட்டுட்டு, ஆட்டோவில் பால் எடுத்துக்கொண்டு விற்பனைக்கு சென்று விட்டார்.
அதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர், திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி இதுகுறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பிறகு அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி கேமாரவில் திருடர்கள் திருடிய காட்சி பதிவாகியுள்ளது. அதன் மூலம் திருடர்களை ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.