சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 18 கைகளுடன் ரஃபேல் வாகனத்தில் அமா்ந்திருப்பது போன்று விநாயகா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை விநாயகா் வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கைகளிலும் ஒவ்வொரு திட்டத்தின் வரிகள் எழுதிய பேனா்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை ஒட்டி, சிலைக்கு சனிக்கிழமை காலை பூஜை செய்யப்பட்டது. சிறப்புப் பூஜையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிரபல பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மக்களவை உறுப்பினா் எச்.வசந்த குமாா் ஆகியோா் கரோனாவில் இருந்து பூரணமாக குணமடைய வேண்டும் என பிராா்த்தனை நடைபெற்றது.