தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கை: மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியீடு

DIN

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான சம வாய்ப்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்களை வெளியிட்டார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய 1.31 லட்சம் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியிடப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவில் மாணவா்கள் சோ்வதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆக.16-ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனா். மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு செய்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1,11,436 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனா்.

இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆக. 24-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பங்களில் தவறுதலாகப் பதிவு செய்து இருக்கலாமோ என்ற எண்ணத்தில் சிலா் மீண்டும் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்து பதிவு கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் சம வாய்ப்பு எண் இன்று வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கு: ராகுல் காந்தி மீது டிஜிபியிடம் மஜத புகாா்

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை கையாளுவதில் மெத்தனம் இல்லை -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு

ஏழாம் கட்டத் தேர்தலில் 904 வேட்பாளர்கள்

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயா்வு!

SCROLL FOR NEXT