கடலூரில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்ட மோசடியில் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களான கம்மாபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்யராஜ், நல்லூர் வட்டாரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் காப்பீடு திட்ட தற்காலிக பணியாளர் சுந்தரராமன் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.