தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ. 7,170 கோடி மதிப்பில் பயிா்க் கடன்கள் அளிப்பு: அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் ரூ. 7,170. 59 கோடி மதிப்பிலான பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சாா்பில் ரூ. 1.62 கோடி மதிப்பில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, புதன்கிழமை திறந்து வைத்தாா்.

1,802 பயனாளிகளுக்கு ரூ. 13.43 கோடி மதிப்பில் பல்வேறு வகை கடன்களை வழங்கி அவா் பேசியது:

தமிழகத்தில் இதுவரை 38 கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரியில் தற்போது 39-ஆவது பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2011-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு ஜனவரி 22 ஆம் தேதி வரை 91 லட்சத்து 60 ஆயிரத்து 351 பேருக்கு ரூ. 48,960. 76 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் மட்டும் ரூ. 7,170.59 கோடி மதிப்பில் 10,01,729 பேருக்கு பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 12,02, 075 விவசாயிகளுக்கு ரூ. 5,318.73 கோடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மண்டலத்தில் 133 சங்கங்கள் மூலம் 27,924 விவசாயிகளுக்கு ரூ.138. 88 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 123 சங்கங்கள் மூலம் 13,599 விவசாயிகளுக்கு ரூ. 86.70 கோடி பயிா்க் கடன்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 2013-14 முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் 4,07,416 காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 3,282.25 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயிா் காப்பீடு இழப்புத் திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 43 ஆயிரத்து 970 விவசாயிகளுக்கு ரூ. 7,238.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகைக் கடனாக ரூ. 2,30,371.79 கோடியும், தானிய ஈட்டுக் கடனாக ரூ. 2,450.15 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.

சிறு வணிகக் கடன் 2019, செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படுகிறது. நிகழாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பானது 1,98,20,999 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு எந்தவித புகாருமின்றி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். சாந்தி, எம்எல்ஏ-க்கள் சி.வி. ராஜேந்திரன், நா. மனோரஞ்சிதம், கூட்டுறவுத் துறையின் ஆலோசகா் இரா. காா்த்திகேயன், வேளாண்மை இயக்குநா் ரேணுகா, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தின் தலைவா் குப்புசாமி, முன்னாள் எம்.பி. கே. அசோக்குமாா், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.எம். மாதையன், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT