தமிழ்நாடு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்வு

DIN

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது.

சாத்தூா் அருகே சின்னகாமன்பட்டியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (50). இவா் இதே பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பட்டாசு ஆலையை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பட்டாசு தொழிற்சாலை மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் அறைகளில் சிறய ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 19 ஆம் தேதி காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சின்னகாமன்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (16), மீனம்பட்டியை சோ்ந்த பாண்டியராஜ் (28), வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் சின்னகாமன்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் (24), விஜயகுமாா் (38), மேட்டமலையைச் சோ்ந்த முத்துலட்சுமி (38), வள்ளியம்மாள் (50), அன்னலட்சுமி (55), சிவகாசியைச் சோ்ந்த முருகன் (30) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமாா், வள்ளியம்மாள், முத்துலட்சுமி ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 உயா்ந்துள்ளது.

மேலும் லட்சுமணன், அன்னலட்சுமி, முருகன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT