தமிழ்நாடு

இதற்கு முன்பு சென்னைவாசிகள் மழையோடு புத்தாண்டைக் கொண்டாடியது எப்போது?

DIN


சென்னை: 2020ம் ஆண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு பிறப்பே, சென்னையில் மழையோடு தொடங்கியுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னையில் பொதுவாக ஜனவரி மாதத்தில் கிடைக்கும் சராசரி மழையின் அளவு என்பது 26 மி.மீ. தான். ஆனால், அந்த மழையானது 2020ம் ஆண்டின் முதல் நாளிலேயே கிடைத்துவிட்டது. 

இதுபோல, கடந்த 2012ம் ஆண்டுதான் புத்தாண்டு பிறப்பன்றே சென்னையில் மழை பெய்தது. ஆனால், மழை அளவு இந்த அளவுக்கு இல்லை.

புத்தாண்டே மிகச் சிறப்பாக துவங்கியுள்ளது. நாளையும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். இதுபோல ஜனவரி 9ம் தேதி வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக மழை பெய்யும். அதன்பிறகு மழை மெல்லக் குறையும். மேலும் ஜனவரி இறுதி நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

SCROLL FOR NEXT