சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
2020ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு நாட்டுத் தலைவர்களும், மக்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு இன்று காலை வருகை தந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.