திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன் வருமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர், டெல்டா அல்லாத மாவட்டங்களில் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கேட்ட இடத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.