நாகர்கோவில்: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் காவல்துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8. ஆம் தேதி இரவு சுட்டுகே கொல்லப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் மற்றும் நாகர்கோவில் கோட்டாறு மாலிக் தினார் நகரைச் சேர்ந்த தவ்பிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 10 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நாகர்கோவில் கோட்டாறு மாலிக் தினார்நகரில் உள்ள தவ்பிக் வீட்டுக்கு இன்று காலை அவரை அழைத்து சென்று விசாரித்தனர் மேலும் வீட்டில் இருந்த அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கு சோதனையும் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்து இதே போல் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு உள்ள அப்துல் சமீம் வீட்டுக்கும் அவரை அழைத்து சென்று விசாரித்தனர்.
இது குறித்து விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் கூறும் போது இளங்கடையில் உள்ள தவ்பிக் வீட்டில் எனது தலைமையிலும் திருவிதாங்கோட்டில் உள்ள அப்துல் சமீம் வீட்டில் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் சோதனை யில் ஈடுபட்டனர். இதில் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளோம் இதைககொண்டு இருவரிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.