தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,512

DIN

சென்னையில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வரலாறு காணாத விலை( ரூ.37,744) உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை சற்று குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.136 குறைந்து, ரூ.37,512-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.17 குறைந்து, ரூ.4,689 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.55,50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.55,500 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி)

1 கிராம் தங்கம்........................... 4,689

1 பவுன் தங்கம்............................... 37,512

1 கிராம் வெள்ளி.............................55.50

1 கிலோ வெள்ளி..............................55,500

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)

1 கிராம் தங்கம்...............................4,706

1 பவுன் தங்கம்...............................37,648

1 கிராம் வெள்ளி.............................55.50

1 கிலோ வெள்ளி..............................55,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT