தமிழ்நாடு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது

DIN

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,469 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1,185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 76,158- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,221 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

60 ஆயிரத்தை எட்டியது: சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 1,185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,338-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 58,615 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 17,469 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.சென்னையில் இறப்பு எண்ணிக்கை 1,253- ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அதாவது 2,497 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவைத் தீ விபத்து: வெளியுறவுத் துறை அமைச்சருடன் மோடி ஆலோசனை

குவைத்தில் பயங்கர தீ விபத்து - புகைப்படங்கள்

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு!

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! மைனர் காதலனுக்கு வலைவீச்சு!!

குவைத் கட்டடத்தில் தீ விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

SCROLL FOR NEXT