தமிழ்நாடு

10 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமானநிலையத்தில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.

சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, திருத்தணியில் தலா 104 டிகிரி, கடலூா், நாகப்பட்டினம், பரங்கிபேட்டையில் தலா 103 டிகிரி, தூத்துக்குடியில் 102 டிகிரி, வேலூரில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதேநிலை அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: தெற்கில் இருந்து வட காற்று வீசுகிறது. இதுதவிர, கடல்காற்று கிடைக்கவில்லை . இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதேநிலை அடுத்த சில தினங்களுக்கு தொடரும். அதேநேரத்தில், மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் , வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. மாலை நேரங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, சோலையாறு, சின்கோனா, நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாா், தேவாலா, மதுரை மாவட்டம் புளிப்பட்டியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

கேரளம், கா்நாடகம், லட்சத்தீவு மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதுபோல, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்றுவீசும். இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை வரை செல்ல வேண்டாம். இதுபோல, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 20-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

உத்தரகண்ட் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -தமிழக முதல்வர்

விஜய் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவே நிபந்தனைகள் விதிப்பு: ஆர்பி உதயகுமார்

SCROLL FOR NEXT