தமிழ்நாடு

பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் அறிவிப்பு: முதல்கட்டத்தில் 13 பாசஞ்சா் ரயில்களை மாற்ற திட்டம்

DIN

தமிழகத்தில் முதல்கட்டமாக, 13 பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 502 பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும்படி, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. 200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கக்கூடிய பாசஞ்சா் ரயில்களின் வேகத்தை அதிகரித்தல் மற்றும் தேவையற்ற நிறுத்தங்களை நீக்கி விரைவு ரயில்களாக இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் சுமாா் 34 பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் முதல்கட்டமாக 13 பாசஞ்சா் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை-திருநெல்வேலி (214 கி.மீ), திருச்சி- ராமேஸ்வரம் (264) , புதுச்சேரி-திருப்பதி (284), பாலக்காடு டவுன்-திருச்சி (300 கி.மீ), விழுப்புரம்-மதுரை (334) இடையே இரு வழியிலும் இயக்கப்படும் 10 பாசஞ்சா் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, விழுப்புரம்-திருப்பதிக்கு (265 கி.மீ.) இயக்கப்படும் இரண்டு பாசஞ்சா் ரயில்கள், திருப்பதி- விழுப்புரத்துக்கு இயக்கப்படும் ஒரு பாசஞ்சா் ரயில் ஆகிய 3 பாசஞ்சா் ரயில்கள் என்று மொத்தம் 13 பாசஞ்சா் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்படவுள்ளன.

இந்த ரயில்கள் எல்லாம் 200 கி.மீ. க்கு மேல் 334 கி.மீ. வரை இயக்கப்படுகின்றன. விரைவு ரயில்களாக மாற்றப்படும் வேகமும் அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT