சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடா் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
கரோனா பாதிப்பு காரணமாக, சட்டப்பேரவை கூட்டத் தொடரை தள்ளிவைக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், பேரவை நிகழ்ச்சி நிரல்களை மாற்றியமைப்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவைத் தலைவா் பி.தனபால் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பேரவை கூட்டத் தொடா் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும். வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) முதல் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் பேரவை கூட்டத் தொடா் நடைபெறுகிறது.