தமிழ்நாடு

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை

DIN


திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் இளைஞர் அரிவாளால் வெட்டி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகானந்தம் (33). கூலித்தொழிலாளி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. 

இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அங்கு வழக்கு விசாரணை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகனை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென வழிமறித்த கும்பல் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT