தமிழ்நாடு

ஆசிரியரின் சிந்தனை ஓட்டமே குழந்தையின் ஆளுமையை அதிகரிக்கும்: பன்வாரிலால் புரோகித்

DIN

சென்னை: ஆசிரியரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சிந்தனை ஓட்டமும் குழந்தையின் ஆளுமையை அதிகரிக்கச் செய்கின்றது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், ஒவ்வோராண்டும், புகழ்பெற்ற தத்துவஞானியும், அறிஞரும், கல்வியாளரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கல்வி ஒருவரை முழுமையான மனிதனாகவும், புனிதமான ஆன்மாவாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பிரபஞ்சத்திற்கு வழங்கிடும் இனிய கொடையாக இருக்கின்றது. உலகளாவிய சகோதரத்துவம் என்பது நடைமுறை வாழ்வில் கல்விக்கான சிறந்த பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றது. உண்மையான கல்வி ஒரு மனிதனின் தகுதியையும் சுயமரியாதையையும் மேம்படையச் செய்கின்றது. இதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

ஆசிரியர்கள் அறிவாற்றல் படைத்த சிறந்த மனிதர்களாகவும், கற்பிப்பதை நேசிப்பவர்களாகவும் இருத்தல் மிகமிக அவசியமானதாகும். இந்த இரு பண்புகளும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும். நல்ல ஆசிரியர்களால், சிறந்த ஒழுக்கம் கொண்ட, கைதேர்ந்த திறமையுடைய, அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கித்தர முடியும். ஆசிரியர்கள், மாணவர்களின் கனவுகளை நினைவாக்கிட, அவர்களுக்குள் பொதிந்திருக்கும் சிந்தனைத் திறனை ஊக்குவித்து, அறிவாற்றலை மேம்படையச் செய்திட முடியும் என்று நம்புகின்றேன். இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மனித வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்திட முடியும். 

ஆசிரியர்களின் விழுமிய அனுபவங்களே மனித வரலாற்றில் வாழ்வையும் ஒளியையும் இணைக்கும் புள்ளிகளாகும். இத்தகைய ஒளி, அநேக விளக்குகளை ஒளிரச் செய்திடும் கருவியாக உள்ளது. மாணவர்கள் தாங்கள் வெளிப்படுத்திடும் படைப்பாற்றலைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படுகின்றனர். இத்தகைய மதிப்பீடுகள் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் நற்பண்புகளை வளர்க்கும் முயற்சிகளிலிருந்தே பிறக்கின்றன. ஆசிரியரின் மனதுருக்கம், அறியும் தன்மை மற்றும் ஊக்கமளித்தலே வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. 

ஆசிரியரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சிந்தனை ஓட்டமும் குழந்தையின் ஆளுமையை அதிகரிக்கச் செய்கின்றது. சிறந்த ஆசிரியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களின் உன்னத முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டிலுள்ள நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT