தமிழ்நாடு

திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN


திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது.  நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி வழங்க வேண்டும். கிசான் திட்டத்தில் மோசடி  செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நிவாரண நிதி ரூ 7,500 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் சிபிஐ நகர செயலாளர். செல்வராஜ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராயப்பன் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர். எஸ்.மணிவேல் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி பிரசாரம்

வாக்களிக்க இல்லந்தோறும் அழைப்பிதழ் வழங்கும் பணி

தென்காசி, ஆய்க்குடியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சென்னை உள்பட 15 இடங்களில் வெயில் சதம்

சங்கரன்கோவிலில் அதிமுக இறுதிக் கட்ட பிரசாரம்

SCROLL FOR NEXT