கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா
கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் கல்லூரி ஒன்றில் புதிதாக 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 3 கல்லூரிகளைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்த்தில் கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று பரவி வருவது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.