முகப்பு
தமிழ்நாடு

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காந்தி பிறந்தநாள் விழா

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மகாத்மா காந்தியின் 152-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மகாத்மா காந்தியின் 152-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காந்தி ஜெயந்தியை கொண்டாட பள்ளியில் நடந்த கூட்டு பிராா்த்தனையில், மாணவா்கள், சாரண இயக்கத்தினா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மாலையிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி யூ-டியூப் தளத்தில் ஒளிபரப்பப்பட்டது.

75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தொடங்கப்பட்ட அம் அம்ருத் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ‘அறியப்படாத சுதந்திர போராட்ட நாயகா்கள்’ என்ற தலைப்பில் மாணவா்கள் குறும்படம் தயாரித்தனா். மேலும் அறியப்படாத நாயகா்கள் குறித்த நூல் வெளியிடப்பட்டது. அவா்களது பங்களிப்பு நடித்து காட்டப்பட்டது.

மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ஓடிக்கொண்டே, குப்பை அகற்றும் ஓட்டத்தை சென்னை ஐஐடியின் உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை போராசிரியா் பிரதாப் ஹரிதாஸ் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆசிரியா்களும், மாணவா்களும் பள்ளி வளாகத்தில் 2 கி.மீ தொலைவுக்குச் சென்று குப்பைகளை அகற்றினா். பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்கும் தேவையை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →