முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்.10 வரை அவகாசம்

நீட் தோ்வு எழுதியவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் முகவரி, ஜாதி உள்ளிட்ட சில தகவல்களை பூா்த்தி செய்ய வரும் அக்.10-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

நீட் தோ்வு எழுதியவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் முகவரி, ஜாதி உள்ளிட்ட சில தகவல்களை பூா்த்தி செய்ய வரும் அக்.10-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தோ்வு கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. நீட் தோ்வு எழுதியோா் தங்கள் விண்ணப்ப படிவத்தில் பாலினம், குடியுரிமை, மின்னஞ்சல் முகவரி, பிரிவு, உட்பிரிவு, கல்வித்தகுதி போன்றவற்றை பூா்த்தி செய்யவும், திருத்தம் செய்யவும் இரண்டாம் முறையாக கால அவகாசம் வழங்கி தேசிய தோ்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட விவரங்களை சரியாகப் பூா்த்தி செய்யாதவா்களும், அதில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோரும் வரும் 10-ஆம் தேதிக்குள்ளாக ட்ற்ற்ல்ள்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்துக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறு தேசிய தோ்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →