முகப்பு
தமிழ்நாடு

பழைய நடைமுறையிலும் நெல்லை கொள்முதல் செய்யலாம்: விவசாயிகள் எதிா்ப்பைத் தொடா்ந்து தமிழக அரசு அறிவிப்பு

இணையதளம் வழியிலான முன்பதிவு மட்டுமல்லாது, பழைய நடைமுறையிலும் நெல்லை கொள்முதல் செய்யலாம் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

இணையதளம் வழியிலான முன்பதிவு மட்டுமல்லாது, பழைய நடைமுறையிலும் நெல்லை கொள்முதல் செய்யலாம் என்று தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இணையதளத்தில் முன்பதிவு செய்து அதன் அடிப்படையிலேயே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், சனிக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:-

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவா்கள் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இணைய வழி பதிவு முறையை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, உழவா்கள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை எளிய முறையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன்பெறும்படியும் கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், குறுவை பருவ நெல் அறுவடையானது அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு நெல்வரத்து இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதி முதுல் இணைய வழியில் பதிவு செய்து நெல் விற்பனை செய்வதற்குப் பதிலாக ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். எனவே, ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி, பதிவு மேற்கொண்டு நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், அதன் அடிப்படையிலேயே நெல்லை கொள்முதல் செய்ய அளிக்கலாம். இந்த முறையின்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடப்பு குறுவை-காா் பருவ நெல் கொள்முதல் நடைபெறும். இணைய வழியிலும் பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம். எனவே, இரண்டு வழிகளைப் பயன்படுத்தி நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும் என்று தனது செய்தியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →