முகப்பு
தமிழ்நாடு

கரோனா: மேலும் 1,724 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,724 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,724 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக கோவையில் 198 பேருக்கும், சென்னையில் 194 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்தில் 55,572 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்குள்ளாகி 17,263 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து மேலும் 1,635 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.02 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,476-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →