தமிழ்நாடு

செப்.2,3-இல் உள்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 2,3 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.31) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

செப்.1: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்டம்பா் 1-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.2,3: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 2,3 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாா், வால்பாறையில் தலா 40 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் தேக்கடி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 20 மி.மீ., சென்னை விமான நிலையம், தேனி மாவட்டம் பெரியாறு, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தலா10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

நயினார் நாகேந்திரனின் நண்பர் வீட்டில் சோதனை

லோகேஷ் கனகராஜின் புதிய பட அறிவிப்பு!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT