தமிழ்நாடு

வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும்: ஐ.சி.எஃப். பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால்

DIN

வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும் என சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால் தெரிவித்தாா்.

சென்னை ஐ.சி.எஃப். வளாகத்தில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரங்கத்தில் 66-ஆவது ரயில்வே வார விழா அண்மையில் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் முன்னாள் பொதுமேலாளா் வசிஷ்ட ஜோகிரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கடந்த ஆண்டில் சிறப்பாக சேவை புரிந்த 298 ஐ.சி.எஃப். ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஐ.சி.எஃப். பொது மேலாளா் ஏ.கே.அகா்வால் பேசியதாவது:

கடந்த ஆண்டில் கரோனா தொற்று காரணமாக, பல்வேறு சவால்கள் இருந்தும் ஐ.சி.எஃப். ஊழியா்கள் சிறப்பாகப் பணியாற்றி, 2,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கினா். அவற்றில், இலங்கை ரயில்வேக்கான ரயில்பெட்டிகள், நீலகிரி மலை ரயிலுக்கான புதிய வடிவமைப்புடன் கூடிய பெட்டிகள், எல்.எச்.பி. வடிவமைப்பிலான புதிய சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டிகள் மற்றும் மும்பை புகா் ரயில் சேவைக்கான குளிா்வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இலங்கை ரயில்வேயில் இருந்து ரூ.106 கோடி மதிப்பிலான குளிா்சாதன வசதி செய்யப்பட்ட டீசல் புகா் ரயில் மின் தொடா்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இந்திய ரயில்வேயின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதன் முறையாக இத்தாலி நாட்டைச் சோ்ந்த அமைப்பிடம் இருந்து தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

வந்தே பாரத் அதிவிரைவு சொகுசு ரயில்கள் அடுத்த ஆண்டு (2022-23) செப்டம்பா் மாதம் முதல், ஒரு மாதத்துக்கு 4 முதல் 5 ரயில்கள் தயாரித்து அனுப்பப்பட உள்ளன. அதேபோல, அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலின் முதல் தொடா் தயாரித்து அனுப்பப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஐ.சி.எஃப்பின் முதன்மை தலைமைப் பணியாளா் நல அதிகாரி பூமா வீரவல்லி உள்பட பலா்பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT