சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் பிப்ரவரி 4-ம் தேதி வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.35,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், பொது பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து, கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்துவருகிறது.
இதன்தொடா்ச்சியாக, சென்னையில் வியாழக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.256 குறைந்து, ரூ.35,976- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 குறைந்து, ரூ.4,497 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.72.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து, ரூ.72,200 ஆகவும் உள்ளது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,497
1 பவுன் தங்கம்...............................35,976
1 கிராம் வெள்ளி.............................72.20
1 கிலோ வெள்ளி............................72,200
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,529
1 பவுன் தங்கம்...............................36,232
1 கிராம் வெள்ளி.............................73.20
1 கிலோ வெள்ளி.............................73,200