தமிழ்நாடு

60 வயதைக் கடந்த 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள்: கமலஹாசன்

DIN

சேலம் அம்மாபேட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. 

இதில் கமலஹாசன் பேசியது, 

இளைஞர்கள் பெண்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தாய்மார்களின் கூட்டம் அலைமோதுவது மக்கள் நீதி மய்யத்திற்குக் கிடைத்த பெருமை என்றும் பேசினார். இவ்வளவு பெரிய எழுச்சியை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஊழல்வாதிகளுக்கு நன்றி தெரிவித்த அவர் நேர்மைக்கு உயர்ந்த இடத்தை மக்கள் கொடுக்க வேண்டும் என்று மக்கள் உறுதியேற்க வேண்டும், இதுவரை ஓட்டுப்போடாதவர்களின் சதவீதம் அதிகம் உள்ளது. இனி கடமை தவறாமல் வாக்களியுங்கள் ஓட்டு அரசியலை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் 60 வயதைக் கடந்தவர்கள் 85 லட்சம் பேர் இருக்கிறார்கள். 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் தள்ளாதவர்களாக இருந்தால் இளைஞர்கள் கையை பிடித்து ஓட்டுச் சாவடிக்கு அழைத்துச் செல்லுங்கள், மக்கள் நீதி மையம் கட்சியில் நேர்மை, நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் பேசினார்.

இதனிடையே எட்டு வழிச்சாலையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் மக்கள் நீதி மைய்யம் தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கமல்ஹாசனிடம் மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கயத்தில் ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

அவிநாசியில் ஆா்எஸ்எஸ் பேரணி

திருப்பூா் பாலா ஆா்த்தோ மருத்துவமனையில் லண்டன் நோயாளிக்கு லேசா் சிகிச்சை

காலமானாா் ஜி.லட்சுமி

நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT