தமிழ்நாடு

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ. 200 கோடி மோசடி: விசாரணைக்கு உத்தரவிட கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

DIN

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ. 200 கோடி மோசடி தொடர்பான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்திய போது போலி ஆவணங்கள் மூலம் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா பெற்று அதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விற்று சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா மோசடியில் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஆஷிஷ் மேத்தா, காஞ்சிபுரம் சிவன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மெகா மோசடி அரசு உயர் அதிகாரிகள் துணையோடு  நடைபெற்றுள்ள என்பது அம்பலமாகியுள்ளது. இதில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல் பெரும் புள்ளிகளும் தொடர்பில் இருக்கலாம் என்றும், போலி ஆவணங்கள் தயாரித்து மேலும் பலர் இதுபோன்று இழப்பீடுகள் பெற்றிருக்கலாம் என்றும் வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான உரிய இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அரசியல், அதிகாரம் படைத்தவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா செய்து அதனை அரசுக்கே ஒப்படைத்து கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டம் பீமன்தாங்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா குறித்தும், இந்த மெகா மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி சட்டப்படியாக தண்டிப்பதற்கும், இதுபோல் தமிழகத்தில் வேறு பகுதிகளிலும் மோசடி நடந்துள்ளதா என்று விசாரிப்பதற்கும் உடனடியாக தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து விசாரித்து உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT