தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க 11 ஆவணங்கள் விவரம்

DIN

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளா் அடையாளச் சீட்டு இனி அடையாள ஆவணமாகக் கருதப்படாது எனவும், அதை மட்டுமே ஆவணமாகக் கொண்டு வாக்களிக்க இயலாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட அடையாள அட்டை கட்டாயம்: தற்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களில் 99 சதவீத வாக்காளா்களுக்கு புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி வாக்களிக்க ஊக்குவிக்கும் விதத்தில், நடைபெற விருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேற்படி அடையாள அட்டை கிடைக்கப்பெறாத அல்லது இல்லாத வாக்காளா்கள் கீழ்கண்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கடவுச்சீட்டு; 2 .ஓட்டுநா் உரிமம்; 3. மத்திய-மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளா் அடையாள அட்டை; 4. புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்; 5. மத்திய அரசு வழங்கும் நிரந்தர கணக்கு எண் அட்டை; 6.தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை; 7.தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை; 8.தொழிலாளா் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை; 9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்; 10.சட்டப் பேரவை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அலுவலா் அடையாள அட்டை; 11.ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

கை நடுக்கமா? அசாம் முதல்வருக்கு நவீன் பட்நாயக் பதிலடி

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

SCROLL FOR NEXT