தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

DIN

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

336 வாக்குச்சாவடிகளுக்கு 397 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கட்சி சின்னம் கொண்ட 397 இயந்திரங்களும் வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என கண்டறியும் 417 கருவிகளும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதன்கிழமை காலை கொண்டுவரப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலர் மான கீதா மற்றும் உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியர் மனசு ஜெகதீசன் தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் பெற்று பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT