திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் திமுக தேர்தல் பணிமனை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே, பழையகோட்டை சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பணிமனையை ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி திறந்து வைத்து, உரையாற்றினார்.
இதில், காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன், திமுக கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்கயம் கிழக்கு நகரப் பொறுப்பாளர் செந்தில்குமார், மேற்கு நகரப் பொறுப்பாளர் காயத்ரி சின்னச்சாமி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.