தமிழ்நாடு

கறிக்கோழி விலை கிலோ ரூ. 22 சரிவு

DIN


நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை  விலையில் மாற்றமின்றி ரூ. 5.05-ஆக நீடிக்கிறது. கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 22 வரை சரிவடைந்துள்ளது. 
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பண்ணையாளர்களிடம் முட்டை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. கரோனா பரவல் காரணமாக நோய்த் தடுப்புக்காக முட்டை வாங்குவது மக்களிடையே அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்புவதும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில், முட்டை விலையில் மாற்றம் செய்யாமல் ரூ. 5.05-ஆக நீடிக்கும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பொது முடக்கத்தால் இறைச்சி விற்பனை பாதிப்படைந்துள்ளதால் கறிக்கோழி விலை ரூ. 84-இல் இருந்து ரூ. 22 குறைக்கப்பட்டு கிலோ ரூ. 62-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

பிரதமரின் பிரசாரத்துக்கு உதவ ஏழு கட்ட தோ்தல்: தோ்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

எங்கே செல்லும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

SCROLL FOR NEXT