தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் மழை குறைந்ததால் நீர் வரத்து குறைவு

DIN

முல்லைப் பெரியாறு அணைப்பகுதி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்குள் நீர்வரத்தும் குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணைப்பகுதியில் வியாழக்கிழமை 38 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 28.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் நீர்வரத்து, விநாடிக்கு 3,855 கனஅடியாக வந்தது.

யாஸ், புயல் கரையை கடந்ததால், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை குறைந்தது. அதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை பெரியாறு அணையில் 4.0 மில்லிமீட்டர், தேக்கடி ஏரியில் 1.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. அதே நேரத்தில் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வினாடிக்கு 2,113 கனஅடியாக வந்தது. 

அணை நிலவரம்

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 131.05 அடி உயரமாகவும், நீர் இருப்பு 4,993 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு, 2,113 கன அடியாகவும் இருந்தது. தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

லோயர் கேம்பில் உள்ள பெரியார் மின்சார உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகளில் முதல் அலகில் 42 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது அலகில் 41 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 43 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT