மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 95.10 அடியிலிருந்து 97.80அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.70அடி உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,477 கன அடியிலிருந்து 39, 634 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.02டி எம் சி யாக இருந்தது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.