தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 972 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 972 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 208 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,53,670-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,06,229-ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 25,427 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6.71 கோடி பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT