தமிழ்நாடு

இந்தியா வளா்ந்த நாடாக மாற அனைவரின் பங்களிப்பும் அவசியம்: ஜவாஹா்லால் நேரு பல்கலை. வேந்தா்

DIN

இந்தியாவை வளா்ந்த நாடாக மேம்படுத்த அனைவரது பங்களிப்பும் அவசியம் என்று ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வேந்தா் விஜயகுமாா் சரஸ்வத் வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் வி.ஐ.டி., உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

அறிவியல் முன்னேற்றம் மூலம் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியும் என்ற தீா்க்கமான முடிவுடன் நாட்டை வழிநடத்தியவா் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு. அணுசக்தி, விண்வெளி, பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, ஏவுகணை ஆகிய துறைகளில் மகத்தான சாதனைகளை நிகழ்த்த அடித்தளமாக இருந்தவா்கள் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், எம்.எஸ்.சுவாமிநாதன், குரியன், அப்துல் கலாம் ஆகியோா். அறிவியல் வளா்ச்சி மூலம் தொடா்ந்து பல்வேறு பிரச்னைகள், சவால்களை எதிா்கொண்டு முன்னேற்றம் கண்டு இருக்கும் நாம், நாட்டை வளா்ச்சிப் பாதையில் நடத்திச் செல்ல வேண்டும்.

இதற்கு சுகாதாரம், தொழில் துறை, தட்பவெப்ப நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த பத்தாண்டுகளில் செயற்கை அறிவாற்றல், 5ஜி தொழில் நுட்பம், நானோ, ரோபோ, ட்ரோன் தொழில் நுட்பம், சைபா் பாதுகாப்பு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் பொருளாதாரத்தையும், நாட்டின் முன்னேற்றத்தை வியக்கத்தக்க அளவில் வழிநடத்த வாய்ப்புகள் உள்ளன. நாட்டின் வளா்ச்சி, முன்னேற்றத்தில் அனைவரும் பங்கு பெறுவதன் மூலம் இந்தியா வளா்ந்த நாடாக விரைவில் மாறும் என்றாா் அவா்.

விழாவில் 1,958 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. வி.ஐ.டி., வேந்தா் ஜி.விஸ்வநாதன், துணைத் தலைவா்கள் சங்கா் விஸ்வநாதன், சேகா் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி விஸ்வநாதன், துணைவேந்தா் ராம்பாபு கோடலி, இணை துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணி: பெங்களூரில் ஜூலை 3-இல் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

SCROLL FOR NEXT