தமிழ்நாடு

ஊராட்சிகளுக்கு ரூ.751 கோடி மானியம் தமிழக அரசு உத்தரவு

DIN

 ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக ரூ.751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பி.அமுதா

வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் இருந்து 10 சதவீதம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 56 சதவீதமும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிா்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாநில நிதி ஆணையத்தின் மானியங்கள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட உள்ளன.

அதன்படி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு ரூ.751 கோடியே 99 லட்சத்து 77

ஆயிரத்து 857 மானியமாக அளிக்கப்படுகிறது. இவற்றில் ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 714-ம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.269 கோடியே 66 லட்சத்து 90 ஆயிரத்து 857-ம் மானியங்களாக வழங்கப்பட உள்ளன. மாவட்ட ஊராட்சிகளுக்கு 58 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரத்து 286 மானியமாக அளிக்கப்படுவதாக தனது உத்தரவில் பி.அமுதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT