தமிழ்நாடு

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு!

DIN


மேட்டூ: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக புதன்கிழமை மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,195 கன அடியாக சரிந்தது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை மாலை 119.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 119.72 அடியாக  உயர்ந்தது.

அணையின் நீர் இருப்பு 93.02 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் புதன்கிழமை மாலை நடப்பு நீர்பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT